நக்கீரன் பத்திரிக்கை மீது சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் விஜய் சார்பில் அரசு வக்கீல் ஜெகன் ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழக கல்லூரிகளில் ரூ.450 கோடி வசூல், துருவும் சி.பி.ஐ. என்ற தலைப்பில் அமைச்சர் விஜய்யை தொடர்புபடுத்தி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது உண்மைக்கு புறம்பானது. அவதூறானது. அமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல் உள்ளது. இதற்காக அதன் செய்தியாளர் மனோஜ்சுந்தர், ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோரை தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.