சங்கரராமன் கொலையில் ஜெயேந்திரர்-விஜயேந்திரருக்கு தொடர்பு உள்ளது: வக்கீல் வாதம்

  shankarraman_murderகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கு புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதம் முடிவடைந்து விட்டது. SANKARACHAR

இதையடுத்து அரசுத் தரப்பு வாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது சங்கராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கும், விஜயேந்திரருக்கும் தொடர்பு உள்ளது என்று அரசுத் தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் தேவதாஸ் கூறினார்.

secon‘சங்கரராமனுக்கும் ஜெயேந்திரருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இருவரும் ஆட்களை ஏவி சங்கரராமனை கொலை செய்துள்ளனர் என்பது சாட்சிகள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. மேலும் சங்கர மடத்தின் மரபுகளையும் அவர்கள் கடைபிடிக்கவில்லை. ஜெயேந்திரர் கடல் கடந்து செல்லக்கூடாது என்று சங்கரராமன் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்’ என்றும் அரசு வழக்கறிஞர் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.  Kanchi-Acharya-

இன்றைய வாதத்தின் முடிவில், தனது வாதத்தை முடிப்பதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

Leave a Reply