இந்தியாவின் எளிமையான முதலமைச்சர்!

மாணிக்சர்கார்

மாணிக்சர்கார்

திரிபுரா மாநிலத்தில் 1998-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து முதல்- மந்திரியாக இருந்து வருபவர் மாணிக்சர்கார். மார்க்கிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் உயர் மட்டக்குழு உறுப்பினரான அவர் 3-வது முறையாக முதல்- மந்திரியாக பொறுப்பு வகித்து வருகிறார்.

22.01.1949-ல் பிறந்த மாணிக்சர்காருக்கு, தற்போது 64 வயதாகிறது. இவர்தான் இந்தியாவின் எளிமையான முதல்- மந்திரி ஆவார். குர்தா மற்றும் பைஜாமா உடையில் எப்போதுமே எளிமையாக இருப்பார். கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது அவர் கையில் இருந்த பணம் ரூ.1080 ஆகும். 2003-ம் ஆண்டு பிரசார தொடக்கத்தில் கையில் இருந்த பணம் ரூ.3 ஆயிரம் ஆகும். 2008-ம் ஆண்டு மாணிக்சர்காரின் வங்கி கணக்கில் ரூ.16,120 பணம் இருந்தது.

Manik-Sarkar- தற்போது ரூ.5,320 ஆக இருக்கிறது. அவருக்கு சொந்தமான வாகனம் எதுவும் இல்லை. முதல்- மந்திரியான அவர் அலுவலக வாகனத்தை மட்டுமே பயன்படுத்துவார். இதே போல அவரது மனைவி பாஞ்சாலியும் எளிமையானவர். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான அவரிடம் ரூ.22,015 பணம்தான் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக அவர்களிடம் 10 பவுன் நகைதான் உள்ளது.

திரிபுராவில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலிலும் மார்க்சிஸ்டு வெற்றி பெற்றால் மாணிக்சர்கார் 4-வது முறையாக தொடர்ந்து முதல்-மந்திரியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply