வடகொரியாவில் பசிக் கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. இதுவரை பசி தாங்க முடியாமல் சுமார் 10,000 பேர் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் பசியைப் போக்க உணவு இல்லாததால் மனிதர்கள் சக மனிதர்களை கொன்று தின்னும் அவலம் அதிகரித்துள்ளது.
மேலும், பலர் மரணித்த சடலங்களை தோண்டி எடுத்து சாப்பிட்டதாகவும் கூறப் படுகிறது. ஒருவர் தன் பிள்ளைகளையே கொன்று தின்ன கொடூர சம்பவமும் அங்கு நடந்துள்ளது. இது குறித்து கூறப்படுவதவாது:
ஒருவர் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் முதலில் தனது மகளைக் கொன்றுள்ளார். அதை மகன் பார்த்ததால் அவனையும் கொன்றுள்ளார். தன் இரு குழந்தைகளுமே இறந்து கிடந்ததைக் கண்டு சந்தேகமடைந்த மனைவி காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளார். இதன் பின்பு கணவரை கைது செய்த காவல்துறையினர். கொல்லப் பட்ட குழந்தைகளின் சடலங்களையும் கைபற்றினர்.
இதுபோன்ற பல சம்பவங்கள் வட கொரியாவில் நடைபெற்று சிலருக்கு மரண தண்டனையும் வழங்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.