புதுவை முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம். இவர் 10-ம் வகுப்பு தனித்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 மற்றும் 30-ந் தேதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு எழுதினார். திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த தேர்வில் அவர் ஆள் மாறாட்டம் செய்ததாக விழுப்புரம் மாவட்ட கல்வி அதிகாரி குப்புசாமி குற்றவியல் போலீசில் புகார் செய்தார்.
அதையடுத்து கல்யாண சுந்தரம் மீது பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்யதாக வழக்குபதிவு செய்யப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்ததாக திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலக ஊழியர் ரஜினிகாந்த் சிங்கனூர் அரசு ஆதி திராவிடர் மேல்நிலைபள்ளி ஆசிரியர் ஆதவன் ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை திண்டிவனம் முதலாவது குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி சரிதா விசாரணை நடத்தினார். வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு கூறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு 3 மணிக்கு வழங்கப்பட்டது. ஆள் மாறாட்டம் செய்த முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரத்திற்கு 4 வருட ஜெயில் தண்டனையும், 12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஆசிரியர் ஆதவன், மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை நீதிபதி சரிதா வழங்கினார்.