தமிழ்நாட்டில் கரும்பு பயிரிடும் பகுதி ஒதுக்கீட்டுக்குழு, புதிய சர்க்கரை ஆலைகளுக்கு உரிய கரும்பு பயிரிடும் பகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கும், ஏற்கெனவே இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பயிரிடும் பகுதிகளைத் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்வதற்காகவும் அமைக்கப்பட்டது.
இந்த கரும்பு பயிரிடும் பகுதி ஒதுக்கீட்டுக்குழுவில், விவசாய பிரதிநிதி உறுப்பினர்களாக கோயம்புத்தூர் மாவட்டம், ஆதிமாதையனூர் செல்வராஜ், தஞ்சாவூர் தங்கமுத்து மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் க. மணிகண்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கரும்பு பயிரிடும் பகுதி ஒதுக்கீட்டுக் குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட செல்வராஜ், தங்கமுத்து மற்றும் வேட்டவலம் க.மணிகண்டன் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 04.02.2013 அன்று தலைமைச் செயலகத்தில் அதற்கான ஆணைகளை வழங்கினார்.