அஃப்சல் குரு (Afzal Guru) என அறியப்படும் மொகமது அஃப்சல் 2001 திசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் சதிக்குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதி மன்றத்தால் 2004ஆம் ஆண்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி ஆவார். அக்டோபர் 20, 2006 அன்று நிறைவேற்றப்பட இருந்த தண்டனை குடியரசுத் தலைவருக்கு முறையிட்ட அவரது கருணை மனுவினை அடுத்து தடுத்து வைக்கப்பட்டது. இந்நாள்வரை மரணதண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தீவிரவாதி அப்சல்குருவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். கருணை மனு நிராகரித்ததை தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்சல் குரு இன்று (09.02.2013) காலை 7.56 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்.
தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து திகார் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தகவலை மத்திய அரசு இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
தீவிரவாதிகளுக்கு உதவிய புகாரில் அடிப்படையில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீரில் ஊரடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.