உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் கும்பமேளா திருவிழாவில் 10.02.2013 ஞாயிற்றுக்கிழமை சுமார் ஒரு கோடி பக்தர்கள் கலந்துகொண்டு கங்கை ஆற்றில் புனித நீராடினர். பின்னர் அவர்கள் தங்களது ஊருக்கு புறப்படுவதற்காக அன்று மாலை அலகாபாத் ரெயில் நிலையத்தில் பல லட்சம் மக்கள் குழுமியிருந்தனர். அப்போது ரெயில் நிலைய பிளாட்பாரம் 5 மற்றும் 6-க்கிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 30 க்கும் மேற்பட்டோர் பலியானர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்தது என்று பொதுமக்கள் குறை கூறினர். இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
பலலட்சக்கணக்கானோர் குழுமியிருந்த ரயில்நிலையத்தில், கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தோருக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள் இல்லையென்று பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் கடிந்துகொண்டனர்.
மதப் பற்றும், கடவுள் பக்தியும் இருக்கும் அதே சமயம், பொறுமையும், சகிப்புத் தன்மையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், தன்னைப் போல பிறரை நேசிக்கும் தன்மையும் இருந்திருந்தால், இந்த சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம்.
-எஸ்.சதிஸ்சர்மா