இலங்கை அதிபர் ராஜபக்சே , டெல்லியில் ஏற்கனவே மதிமுகவின் போராட்டத்தால் அங்கு செல்லாமல் அவர் பயண திட்டத்தை மாற்றினார் .
மாற்றிய பயண திட்டத்தின் பிரகாரம் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் திருப்பதி வந்து திருமலை சாமி தரிசனம் பெற்று சென்று விடலாம் என்ற அளவில், அவரது நிம்மதியான பிரயாணத்திற்காக , அவர் செல்லும் பாதையெல்லாம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
அவர் வருவதிற்கு முன்னரே கிட்டத்தட்ட இரண்டாயிரம் ம.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
கடைசியில் சட்ட கொடூரமாக , தமிழ் ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் இதை எல்லாவற்றையும் மீறி , ரேணிகுண்டாவில் இருந்து விமானத்தில் இறங்கி திருமலை பத்மாவதி தாங்கும் இல்லம் நோக்கி விரைந்த ராஜபக்சேவின் காரை , ம.தி.மு.க.வினர் 200 பேர் திடீர் என்று சாலையில் தோன்றி வண்டியை மறித்தனர் .
இதனால் பதட்டம் அடைந்த ஒட்டுமொத்த இலங்கை அதிபரின் பாதுகாப்பு குழுவும் , ராணுவமும் ம.தி.மு.க.வினரை சுற்றி வளைத்தனர் , இடையில் இந்த பதற்றத்தில் ராஜபக்சேவின் வாகனம் 25 நிமிடம் அந்த இடத்திலேயே நின்று தாமதமாக புறப்பட்டது.
பின்னர் , போராட்டத்தில் ஈடுபட்டோரை ராணுவத்தினர், திருமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .