திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் ஏலூர்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியர் ராஜு என்பவர் வீட்டில் 13.02.2013 அன்று காலை 11.30 மணியளவில் ஒரு பசு மாடு அதிசய பசுங்கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. அக்கன்றுக்குட்டிக்கு 4 கண்களும் 2 வாயும் இருக்கிறது. இந்த அதிசய கன்றுக்குட்டியை பார்ப்பதற்க்காக அப்பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் ஆர்வமுடன் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இக்கன்றுக்குட்டியை உரிமையாளர் யாருக்காவது தானம் செய்வதற்கு தயாராக இருக்கிறார். விருப்பமுள்ளாவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
ஏலூர்பட்டியிலிருந்து – ப.தங்கராஜு