தனது முடிவுக்காக துக்கம் அடையாமல் தைரியமாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற தாக்குதல் பயங்கரவாதி அப்சல் குரு, தனது மனைவிக்கு எழுதிய கடைசி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உருது மொழியில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடித நகலை குருவின் மனைவி தப்பசும் 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு வழங்கினார். பிப்ரவரி 9-ஆம் தேதி காலை 6.25 மணிக்கு அந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பது:
தூக்கு மேடைக்கு என்னை அனுப்பி வைத்த அல்லாவுக்கு லட்சம் நன்றி. நாம் எப்போதும் சத்தியத்தின் பக்கமே வாழ்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளவர்களுக்கு வாழ்த்துகள். எனது வாழ்க்கை சத்தியத்துக்காகவே முடிகிறது. எனது மரணத்தை நினைத்து குடும்பத்தினர் துக்கப்பட வேண்டாம். நான் உயரிய நிலையை அடைந்துள்ளதற்கு மரியாதை செலுத்தினால் போதும். இவ்வாறு குரு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தூக்கு மேடைக்கு செல்வதற்கு முன்பு அப்சல் குரு விடுத்த கோரிக்கையை ஏற்று, அவரது மனைவிக்கு கடிதம் எழுதுவதற்கு சிறை அதிகாரிகள் பேனா, பேப்பர் வழங்கினர்.