நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பொது பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நாட்டின் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்க அறிவிப்புகள் இல்லாத இந்த பட்ஜெட், ப.சிதம்பரத்தின் பகல் கனவு பட்ஜெட். வெளிநாட்டு முதலீட்டை பெருக்குவதற்கு மட்டுமே மத்திய பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த எவ்வித அறிவிப்பும் இல்லை.
நிதிப் பற்றாக்குறையை மாநில அரசுகளை பயன்படுத்தி தீர்க்க மத்திய அரசு நினைக்கிறது. இந்த பட்ஜெட்டில் மாநில அரசுகளுக்கு எதிரான மத்திய அரசின் மனப்பான்மை தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.