இன்று (28.02.2013) காலை தே.மு.தி.க.வை சேர்ந்த செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.சுரேஷ்குமார், தலைமை செயலகம் சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் தே.மு.தி.க-வைச் சேர்ந்த செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.சுரேஷ் குமார் நேரில் சந்தித்தார். மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும், கர்நாடகத்தின் பிடிவாதப் போக்கினையும் மீறி சட்டப் போராட்டத்தின் மூலம் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி, மகத்தான சாதனை புரிந்தமைக்கு தனது சார்பாகவும், தன் தொகுதி மக்கள் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.