இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்து சர்வதேச அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியாவைச் சேர்ந்த சுப்பரமணியசுவாமி சர்வ சாதாரணமாக இலங்கைக்கு சென்று, சிங்கள அதிபர் மகிந்தா ராஜபட்ஷேவை இன்று (28.02.2013) நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். சுப்பரமணியசுவாமி தன்னை நேரில் சந்தித்ததை சிங்கள அரசு மிகப்பெரிய சாதனையாக கருதி இச்சந்திப்பு குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. என்னை ஆதரிக்கவும் இந்தியாவில் ஆள் இருக்கிறார்கள் என்பதை சித்தரிக்கும் விதமாக மகிந்தா ராஜபட்ஷே மறைமுகமாக தமிழக அரசியல் வாதிகளுக்கு சவால் விட்டிருக்கிறார் என்பதை தான் இச்சந்திப்பு உணர்த்துகிறது. இச்சந்திப்பின் போது என்ன பேசப்பட்டது என்பதை இதுவரை இலங்கை அரசு வெளியிடவில்லை.
சிங்கள அதிபர் ராஜபட்ஷேயுடன் சுப்ரமணியசுவாமி சந்திப்பு..!
News
February 28, 2013 8:56 pm