மலேசியா, சபா செம்பூர்ணாவில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய அதிரடி தாக்குதலில் மேலும் ஒரு போலிஸ் அதிகாரி பலியானார். கடந்த இருவாரங்களாக சபாவில் நடந்து வரும் இத்தாக்குதலில் பலியான போலீஸ்காரரிகளின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.
ஆயுதமேந்திய கும்பலைச் சேர்ந்த மேலும் நான்கு துப்பாக்கிக்காரர்களும் கொல்லப்பட்டனர், என்று லாஹாட் டத்துவில் செய்தியாளர் கூட்டத்தில் மலேசியா தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் கூறினார்.
01.03.2013 லாஹாட் டத்துவில் சூலு சுல்தானுக்கு விசுவாசமான ஆயுத கும்பலுடன் நிகழ்ந்த மோதலில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதை அடுத்து செம்பூர்னாவில் இது நிகழ்ந்துள்ளது. செம்பூர்னாவில் இதுவரை ஆறு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.