பஞ்சாபில் டரன் டரன் பகுதியைச் சேர்ந்த, ஹர்பிந்தர் கவுர் என்ற ஒரு பெண் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது மது அருந்திய ஒரு கும்பல், இவரை தொந்தரவு செய்துள்ளனர். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு சென்ற காவலர்கள், கஷ்மீரா சிங் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். அப்போது அந்த இளம் பெண்ணின் தந்தையையும் காவலர்கள் அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து ஹர்பிந்தர் கவுர், ஏன் எனது தந்தையை அழைத்து சென்றீர்கள் என்று வாக்குவாதம் செய்துள்ளார். அப்பொது தேவேந்தர் சிங் மற்றும் சாரா சிங் ஆகிய காவலர்கள், அந்தப் பெண்ணையும், அவரது தம்பியையும் அடித்து நொறுக்கினர்.
இது குறித்து போலீஸ் நிர்வாகத்திடம் அவர்கள் புகார் கூறியுள்ளனர். இதை அந்த காவலர்கள் ஏற்க மறுத்துள்ளனர். அப்போது நடந்த சம்பவத்தை செல்போனில் எடுத்த காட்சிகள் போட்டுக் காட்டப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்துவதற்கு எஸ்.பி. உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட காவலர்கள் 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.