கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 04.03.2013 அன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு பேசியதாவது:-
ஆசிய துணை கண்டத்தில் அனேக வேற்றுமைகள் உள்ள நிலையில் மதத்தை மட்டுமே காரணம் காட்டி பாகிஸ்தான் என்ற ஒரு பகுதியை தனி நாடாக பிரித்துத் தந்தது தவறு.
இப்படிப்பட்டதொரு தனி நாடாக பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதன் விளைவுதான், அங்கே நாள்தோறும் வன்முறைகளாகவும், உயிர் பலிகளாகவும் தொடர்ந்துக் கொண்டுள்ளது. பாகிஸ்தானில் நிலவிவரும் அமைதியில்லா வாழ்க்கைச் சூழலும் ஜுராசிக் பார்க் போன்ற உயிர் பலிகளும் அன்று விதைக்கப்பட்ட தனி நாடு என்ற விதையின் இன்றைய அறுவடைப் பலனான அழிவுகள் தான். இவ்வாறு கட்ஜு பேசினார்.