ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மலேசியாவில் தமிழர்களின் சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 12.03.2013 அன்று மலேசிய தலைநகர் கோலாலெம்பூரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது கோழைத்தனமும், ஊழலும் நிறைந்த இந்தியாவே எங்கள் மண்ணில் இருந்து தூதரகத்தை இழுத்து மூடு என்று பாதகையுடன் கோஷங்கள் எழுப்பினார்கள். ஈழத்தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தனிஈழம் தான் சரியான தீர்வு என்றும் மக்கள் கூறினார்கள்.