தமிழக மீனவர்கள் கைது இலங்கை தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும்: பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

jayalalitha.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 53 மீனவர்கள் 9 விசைப்படகுகளில் 13-3-2013 அன்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து தலைமன்னாருக்கு கொணடு சென்றுள்ளனர்.

இந்திய மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் கொண்டுள்ள வெறுப்புக்கு இச்சம்பவம் மற்றொரு உதாரணமாகும். எனவே, டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து, இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடக்கூடாது என்றும், மீனவர்களை கைது செய்யக்கூடாது என்றும் கண்டிக்க வேண்டும்.

இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது எந்தவித குற்ற வழக்குகளும் பதிவு செய்யாமல் விடுதலை செய்யும்படி இலங்கைக்கு அறிவுறுத்த வேண்டும். எதிர்காலத்தில் தேவையில்லாமல் கைது செய்வதன் மூலம் ஆத்திரமூட்டும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

pr140313_170 copy

Leave a Reply