தென் ஆப்பிரிக்காவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எச்.ஐ.வி. தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்! அதில் 28% பள்ளிச் சிறுமிகள்!

HIV -South-Africa'sஆப்பிரிக்க கண்டத்தின் தென்கோடியில் உள்ள தென் ஆப்பிரிக்க நாட்டில் பள்ளிச்சிறுவர்கள் 4% பேருக்கு எச்.ஐ.வி. இருக்கிறது என்றால், பள்ளிச்சிறுமிகள் 28% பேர் இந்த எச்.ஐ.வி. கிருமி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. South Africans protest in support of action on HIV and Aids

இங்கு 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 94,000 சிறுமிகள் கருவுற்று இருக்கிறார்கள். இதில் 77,000 சிறுமிகள் கருக்கலைப்பு செய்து இருக்கிறார்கள். பணக்கார முதியவர்கள், வறுமையில் உள்ள சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 நாட்டில் எச்.ஐ.வி. கிருமி தாக்குதலுக்கு ஆளாகி ஆண்டி ரிட்ரோவைரல் மருந்து எடுத்துக்கொண்டோரின் எண்ணிக்கை  6,78,500 லிருந்து இப்போது 5 லட்சமாக மாறியுள்ளது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

மொத்தத்தில் 10 சதவிகிதம் பேர், அதாவது 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு எச்.ஐ.வி. தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் அதிக அளவிலான சிறுமிகள் எச்.ஐ.வி. கிருமிகளால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது தங்களது இதயத்தை காயப்படுத்துகிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். கடந்த வருடம் 2,60,000 பேர் எய்ட்ஸ் நோயால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply