பிச்சைக்காரரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு: அமெரிக்காவில் நடந்த அதிசயம்!

poor manஅமெரிக்காவில் விலையுயர்ந்த வைர மோதிரத்தை உரியவரிடமே திருப்பிக்கொடுத்த பிச்சைக்காரருக்கு உலகமெங்கும் இருந்து பாராட்டுகளும் நிதி உதவியும் குவிந்து வருகின்றன.ringசாரா என்பவரின் வைர மோதிரம் ஹரிஸ் என்ற பிச்சைக்காரருக்கு பிச்சையிடும் போது தவறி வீழ்ந்துள்ளது. இதனைக் கண்டெடுத்த ஹரீஸ் அதனை மீண்டும் சாராவிடமே திருப்பிக்கொடுத்தார். இந்த நேர்மைமிக்க சம்பவத்தினால் கடந்த மாதம் ஹரிஸும் மோதிரத்தை தொலைத்த சாராவும் ஊடகங்களில் பிரதான செய்திகளில் இடம்பிடித்தனர்.
இச்சம்பவம் அமெரிக்காவின் கன்சாஸில் இடம்பெற்றது. இதனையடுத்து சாரா பிச்சைக்காரரின் நேர்மையைப் பாராட்டி அவரைப் பற்றி உலகுக்கு தெரிவித்ததுடன் அவரின் பொருளாதார கஷ்டத்திற்கு உதவுதற்கும் முன் வந்ததுடன் ஏனையோரையும் இணையத்தின் மூலம் அழைத்தார்.

தற்போது புதிய செய்தி என்னவென்றால் சாராவின் கதையைக் கேட்டு இணையத்தில் உலகளவில் 8 ஆயிரம் பேர் இணைந்து 182 ஆயிரம் அமெரிக்க டொலர்களை ஹிரீஸுக்காக வழங்கியுள்ளதாக சாரா தெரிவித்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற பணத்தின் மூலம் ஹரீஸின் பொருளாதார நிலைமைகளை சீர் செய்யவுள்ளதோடு அவருக்கு சொந்தமாக ஒரு வீட்டினை வாங்கிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சம்பவத்தினால் உலகிற்கு தெரியவந்த ஹரீஸை நீண்ட நாட்களாக தேடிவந்த அவரது 2 சகோதரர்களுக்கும் அறியக் கிடைத்துள்ளது.

இதனால் பிரிந்திருந்த ஹரீஸின் குடும்பம் மீண்டும் இணைந்துள்ளது. மேலும் ஹரீஸ், அவரது சகோதரர்களை வரும் கோடையில் சந்திக்கவுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் பலரும் இணையத்தில் கருத்துவெளியிடுகையில், ஹரீஸின் நேர்மைக்கு கிடைத்த பரிசு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply