ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஓட்டெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக 25 வாக்குகளும், தீர்மானத்திற்கு எதிராக 13 வாக்குகளும் பதிவாகியுள்ளது. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஐப்பான் உள்ளிட்ட 8 நாடுகள் ஓட்டெடுப்பை புறக்கணித்தன. 25 வாக்குகள் பெற்று அமெரிக்க தீர்மானம் நிறைவேறியது. முன்னதாக அமெரிக்க தீர்மானம் குறித்து பேசிய இலங்கை தூதர், அமெரிக்க தீர்மானம் எற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார். இந்தியா இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்தது.
மனித உரிமைகள் மீறல் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. ஆனால் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இந்தியா திருத்தம் எதுவும் கொண்டுவர வில்லை. திருத்தம் இல்லாமலே ஆதரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது.
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:
கொரியா, மோல்டோவா குடியரசு, ருமேனியா, செரா லியோன், சுவிட்சர்லாந்து, எஸ்டோனியா, செக்குடியரசு, லிபியா, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, பெரு, போலந்து, இந்தியா, அமெரிக்கா, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, மான் டிநெக்ரோ, பெனின், பிரேசில், சிலி, கோஸ்டாரிகா, கவுதமாலா, ஸ்பெயின், ஐவரிகோஸ்ட்
தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகள்:
பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஈகுவடார், கதார், காங்கோ, மாலத்தீவுகள், உகாண்டா, ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, வெனிசூலா, பிலிப்பைன்ஸ், குவைத், மவுரிடானியா