ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டியில் ஊர்மக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று (22.03.2013) நடந்தது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடக்கும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேயை குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து சுதந்திரமான பன்நாட்டு நீதி விசாரணை நடத்தவேண்டும், தனி தமிழ்ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் 90 வயதான வைகோவின் தாயார் மாரியம்மாள் கலந்து கொண்டார்.
காலை 9.15 மணிக்கு உண்ணா விரதம் தொடங்கியது. இன்று மாலை வரை உண்ணா விரதம் நடந்தது. உண்ணாவிரதம் நடந்த இடத்திற்கு “பாலசந்திரன் திடல்” என்றும், பந்தலுக்கு “முத்துக்குமார்” என்றும் பெயர் வைக்கப்பட்டிருந்தது. உண்ணாவிரத்தில் பொதுமக்கள், மாணவர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.