இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்து ஜெனிவாவில் நாடகமாடி ஈழத்தமிழர்களை ஏமாற்றிய அமெரிக்காவை கண்டித்தும், ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள வெறியன் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தியும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்!!
கீழ்க்கண்ட கோரிக்கைகளை வழியுறுத்தி தற்போது மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஏமாற்று வேலை, சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டணை வழங்க வேண்டும்.
- இலங்கையில் நடைபெற்றது வெறும் போர்குற்றமோ மனித உரிமை மீறலோ அல்ல, அது திட்டமிட்ட தமிழ் இனப்படுகொலை.
- சர்வதேச விசாரணையும், பொதுவாக்கெடுப்பு மட்டுமே ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரே தீர்வு.
- சிங்கள இனவெறி அரசின் துணைதூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீர்மானம் கொண்டு வரவேண்டும்.மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.
- தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.
- உலகத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத்துறையை தொடங்க அனுமதிக்க வேண்டும்.
- ஈழத்தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். சர்வதேச பன்னாட்டு நீதிமன்றம் முன் விசாரணை நடத்த வேண்டும்.
- ஆசிய நாடுகள் எதுவும் சர்வதேச விசாரணைக் குழுவில் இடம்பெறக்கூடாது.
- இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
- ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.
- தமிழக மீனவர்களின் உயிர்களை பாதுகாக்க ஒரே வழி கட்சத்தீவை மீட்பதுதான்.
இடம் : திருச்சி அரியமங்கலம், அமலோற்பவபுரம்
நாள் : 26.03.2013
காலை : 10.00 மணி முதல் மாலை 05.00 மணி
உண்ணாவிரத போராட்ட இடத்திலிருந்து..
கி. முத்துலெக்ஷ்மி
படங்கள் : அருண்கேசவன்