பல்கலைக்கழகம் மீது குண்டு வீச்சு 15 மாணவர்கள் பலி: சிரியாவில் நடந்த பயங்கரம்!

syria1சிரியாவில் அதிபர் பஷர் அல்- ஆசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடக்கிறது. அதில், இதுவரை 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை.

இந்த நிலையில், தலைநகர் டமாஸ்கசில் மக்களுக்கு ஆதரவாக போராடும் புரட்சிபடையினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
syria2syria3

அப்போது, அவை கட்டிடக்கலை பல்கலைக்கழக கேண்டீன் மீது விழுந்து தாக்கியது. இச்சம்பவத்தில் அங்கிருந்த 15 மாணவர்கள் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply