மலேசிய துணைப் பிரதமரின் பேச்சுக்கு மலேசிய மக்களிடம் கடும் எதிர்ப்பு!

MUHYIDDIN

மலேசிய பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் ஏற்ற இறக்கம் நிகழ்வது இயல்பான ஒன்றுதான் என்றும், அது ஒன்றும் புதிதல்ல. அண்மையில் அறிவிக்கப்பட்ட மலேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் (பிபிபிஎம்) இலக்குகளில் பல்கலைக்கழகங்களின் தரவரிசையை உயர்த்துவதும் ஒன்றாகும் என்றும், பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் இறக்கம் கண்டதற்கான காரணத்தைக் கண்டறிந்து கூறினால் அரசாங்கத்தால் அவற்றுக்கு உதவ முடியும் என்றும் மலேசிய துணைப் பிரதமரும் மற்றும் கல்வி மைச்சருமான முகைதின் யாசின் பிரிட்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.  இதற்கு மலேசிய மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இணையதளங்களில் மலேசிய மக்கள் தெரிவித்துள்ளக் கருத்துக்கள்:

1. மலேசிய மக்களாகிய நாம் எந்த அளவிற்கு முட்டாள்கள் என்பதற்கு கல்வியமைச்சரின் கருத்து ஒன்றே தக்க சான்று. தற்போதைய கல்வி தரம் தாழ்ந்து போனதற்கு, தார்மீக  பொறுப்பேற்று கல்வியமைச்சர் பதவி விலக வேண்டும். ஆனால் அவரோ பழியை தூக்கி மக்கள் மீது போட்டு, மக்களை முட்டாளாக்குகிறார். நாம் முட்டாள்களாக இருக்கும் வரை இவரைப்போன்ற வர்களுக்கு கவலையே கிடையாது.

2.இந்தப் பின்னடைவுக்கு 1008 காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்காமல், இதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்று கல்வியமைச்சர் பதவியை விட்டு முகைதின் யாசின் விலக வேண்டும். பொது மக்களும் பொது அமைப்புக்களும் முகைதின் யாசினுக்கு நெருக்குதல் தரவேண்டும்.

3.தரமற்ற ஒருவரை கல்வி அமைச்சராக ஏன் நியமித்தார்கள் என்பதனை முதலில் கண்டறிந்தால் நாட்டின் கல்வித்தரம் உயர்வதற்கு மலேசியரால் உதவ முடியும்.

4.இப்பொழுது கல்வியின் தரம் முழுமையாகத் தாழ்ந்ததற்கு நீ கண்ணாடி முன் நின்று பார்த்தால் விடை கிடைக்கும். இன்னும் ஒருபடி மேலே போனால், அம்னோவும் அதன் இன அடிப்படையிலான கல்வி கொள்கையுமே இதற்கு காரணங்கள். தெரியாதது போல் நடிக்காதே…!

5.காரணங்கள் பெரிதாக ஒன்றுமில்லை.  ஆளுங்கட்சியான அம்னோவைச் சேர்ந்தவர்களை எல்லாம் பேராசிரியாராக பதவி உயர்வு கொடுத்தால் இது தான் நடக்கும்.

Leave a Reply