மின் தடை நேரங்களில் செயல்படாத இந்தியன் வங்கி ஏ.டி.எம்!

  atmகரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் செயல்பட்டுவரும் இந்தியன் வங்கி ATM இயந்திரம் மின் தடை நேரங்களில் செயல்படுவதில்லை. இந்தியன் வங்கி ATM அமைக்கப்பட்டு பல வருடங்கள் கடந்தும் இன்றுவரை UPS அமைக்கபடவில்லை. வாடிக்கயாளர்கள் பணம் எடுக்கும்பொழுது மின் வெட்டு ஏற்படுமாயின் வாடிக்கையாளரின் ATM அட்டையானது இயந்திரத்தின் உள்ளேயே சிக்கிக்கொள்கிறது. பின் வாடிக்கையாளர் வங்கிக்கு தெரியபடுத்தி வங்கி பணியாளர்கள் வந்து அட்டையை எடுத்து தரும் வரை காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அரசு விடுமுறை தினங்களில் வாடிக்கையாளர்கள்  ATM அட்டை சிக்கிகொள்ளும்போது வேறு எங்கும் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது. 

வெளியூர் வாடிக்கையாளர்கள்  ATM அட்டை சிக்கிகொள்ளும்போது அவசர நிலையில் கூட தங்கள் பயணங்களை மாற்றி வங்கி பணியாளர் வரும்வரை காத்திருக்கவேண்டி உள்ளது.   ATM இயந்திரத்தில் எவ்வளவோ நவீனம் வந்த பின்பும் இந்த நிலை வாடிக்கையாளர்களை பெரிதும் கவலைக்குள்ளாக்குகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் அவசர உதவிக்கு கூட  ATM-ல் பாதுகாவலர் இல்லை என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலைமாற இந்தியன் வங்கி நடவடிக்கை எடுக்குமா? 

-பன்னீர்