இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல்

2sl1sl

சீன கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இன்று(13.01.2014) இலங்கை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்த கப்பல்களில் ஒன்று சீனன்குடா அஷ்ரப்பு துறைமுகத்திலும் மற்றையது வெளித்துறைமுகத்திலும் நங்கூரமிட்டுள்ளன. Gin Chang Shang, Heng Suie ஆகிய சீன கப்பல்களே திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இந்த கப்பல்கள் இலங்கை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தபோது அங்கு ஏற்கனவே நங்குரமிடப்பட்டுள்ள லோஹோஸ் ஹோப் கப்பலில் சேவையாற்றும் தொண்டர்கள் சீன நாட்டு கொடிகளை அசைத்து குறித்த கப்பல்களை வரவேற்றனர். இந்த கப்பல்கள் மூன்று தினங்களுக்கு இலங்கை திருகோணமலை துறைமுகத்தில் நிற்கும்.