கத்தோலிக்கத் துறவிகளின் காமலீலைகள்! திருச்சபை திருத்திக் கொள்ள வேண்டும் : ஐ.நா கண்டிப்பு

crc-logoun.crc- rc.jpgfun.crc- rc

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்கும் கொள்கைகளை, ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பீடமான வத்திக்கான் தொடர்ந்து கடைப்பிடித்தது என்று ஐ.நா மன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

சிறார்களின் உரிமைகள் பாதுகாப்புக்கான ஐ.நா மன்றக் குழு,(சி.ஆர்.சி), சிறார்களைத் துஷ்பிரயோகம் செய்ததாக அறியப்படும் அல்லது சந்தேகிக்கப்படும் பாதிரியார்களை போப் உடனடியாக அகற்றவேண்டும் என்று கூறியிருக்கிறது.

தாங்கள் செய்த குற்றங்களை மறைத்த பாதிரியார்கள் பற்றிய பட்டியல்களை போப் வெளிப்படுத்த வேண்டும், அதன் மூலம் அவர்கள் மீது பொறுப்பை சுமத்த முடியும் என்று ஐ.நா மன்ற சிறார்கள் உரிமைக் குழு தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. நடந்த குற்றங்களை இதுவரை போப் ஒப்புக்கொள்ளவில்லை என்பது பற்றி தாங்கள் கவலை அடைந்திருப்பதாகவும் ஐ.நா குழு கூறியுள்ளது.

குற்றம் செய்த பாதிரியார்களை அவர்கள் பங்குத் தந்தையாக இருக்கும் பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு இடம் மாற்றுவது, சில சமயங்களில் நாடு விட்டு நாடு மாற்றுவது போன்ற நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதையும் அது கண்டித்திருக்கிறது.

பல நாடுகளில் சிறுவர் சிறுமியர் இன்னும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடிய ஆபத்தில்தான் இருக்கிறார்கள் என்றும், இக்குற்றத்தில் ஈடுபட்ட பல பாதிரியார்கள் இன்னும் சிறார்களுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள் என்றும் அக்குழு கூறியுள்ளது.

ஏற்கனவே வத்திக்கான் அதிகாரிகளை ஐ.நா குழு வெளிப்படையாக விசாரணை செய்து, இது குறித்த தகவல்களை வத்திக்கான் ஏன் வெளியிடக்கூடாது என்றும், எதிர்காலத்தில் இது போன்ற துஷ்பிரயோகங்கள் நடக்காமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியது.

ஆனால், துஷ்பிரயோகங்கள் குறித்த தரவுகளை, மற்றொரு நாடு கேட்டால் மட்டுமே, அதுவும், சட்டரீதியான நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே, தன்னால் தரமுடியும் என்று கூறி, ஐ.நா மன்றத்தின் கோரிக்கையை வத்திக்கான் நிராகரித்து விட்டது.