இலங்கையில் நடைபெற்ற யுத்தம் குறித்து சர்வதேச நாடுகள் கவலைப்படவோ, விசாரணை நடத்தவோ அவசியமில்லை: இலங்கை முன்னாள் கடற்படைத் தளபதி திசர சமரசிங்க

இலங்கை முன்னாள் கடற்படைத் தளபதி திசர சமரசிங்க

இலங்கை முன்னாள் கடற்படைத் தளபதி திசர சமரசிங்க

யுத்தத்தில் சில பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் எனினும் திட்டமிட்ட தாக்குதல்களாக கருத முடியாது என இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியும், அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை ஹைகமிஷனருமான திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்று முடிந்த  யுத்தம் தொடர்பில் சர்வதேச நாடுகள் கவலைப்படவோ, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தவோ அவசியமும் கிடையாது. எனினும் சர்வதேச சமூகம் கூறுவது போல இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. மேலும், படையினர் இன ஒடுக்குமுறையில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிலும் எவ்வித உண்மையும் கிடையாது.

யுத்தத்தின் போது பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்று  நான் கூறவில்லை. எனினும் யுத்தத்தின் போது சில பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம். இருப்பினும் அவை திட்டமிட்ட தாக்குதல்களாக கருதப்பட முடியாது.

எனவே,  30 ஆண்டுகளாக இலங்கையில் நீடித்து வந்த யுத்தம் தொடர்பில் கவனம் செலுத்தாது இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் மட்டுமே சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி வருகின்றது.

அன்றைய காலங்களில் மதவழிபாட்டில் ஈடுபட்டு வந்த அப்பாவி சிறுவர் சிறுமியரை பாண் வெட்டுவது போன்று புலிகள் வெட்டிக் கொன்றனர். அப்போது சர்வதேச சமூகம் ஏன் கேள்வி எழுப்பவில்லை.

உள்நாட்டு யுத்தம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு உள்நாட்டு ரீதியிலான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படும்.  அத்துடன் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்ததின் போது கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி தமிழர்களை கொன்று குவிப்பதற்கு இவர் முக்கிய காரணமாக இருந்தார் என்று ஏற்கனவே இவர் மீது சர்வதேச சமூகம் குற்றம் சாட்டியுள்ளது.

The Commander of Sri Lankan Navy, Vice Admiral Thisara Samarasinghe called on the Chief of Naval Staff, Admiral Nirmal Verma, in New Delhi on October 20, 2010

The Commander of Sri Lankan Navy, Vice Admiral Thisara Samarasinghe called on the Chief of Naval Staff, Admiral Nirmal Verma, in New Delhi on October 20, 2010 (File Photo)

மேலும், இறுதியுத்தத்திற்கு முன்பும் அதற்கு பிறகும் இலங்கை அரசின்  சார்பில் இந்திய அரசிடம்  இணக்கமான இராஜ்ஜிய உறவுகளை  இவர் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The Commander of Sri Lankan Navy, Vice Admiral Thisara Samarasinghe called on the Chief of Army Staff, Gen. V.K. Singh, in New Delhi on October 20, 2010. (File Photo)

The Commander of Sri Lankan Navy, Vice Admiral Thisara Samarasinghe called on the Chief of Army Staff, Gen. V.K. Singh, in New Delhi on October 20, 2010. (File Photo)

தற்போது இலங்கையில் இறுதிப்போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமை குறித்து சர்வதேச விசாரணை நடத்துவதுகுறித்து, இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவினால் மூன்றாவது ஆண்டாக தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

The Commander of Sri Lankan Navy, Vice Admiral Thisara Samarasinghe called on the Defence Minister, Shri A. K. Antony, in New Delhi on October 20, 2010. (File Photo)

The Commander of Sri Lankan Navy, Vice Admiral Thisara Samarasinghe called on the Defence Minister, Shri A. K. Antony, in New Delhi on October 20, 2010. (File Photo)

இந்நிலையில் ‘எங்க அப்பன் குதிருகுள்ள இல்லை’ என்ற கதையாக இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி திசர சமரசிங்க புலம்ப தொடங்கிவிட்டார்.