விசித்திரமான நோய்களும், இரக்கமற்ற மனிதர்களும்!

Skin Tumorசெரோடின்1

விண் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துகொண்டு போனாலும், வினோதமான பிறப்புக்கள், விபரீதமான நோய்கள், விபரிக்கமுடியாத பிரச்சனைகள்… அன்றாட வாழ்வில் அங்கம் வகித்து கொண்டுதான் இருக்கின்றது. ஆயிரம் இருந்தும், ஆயிரம் வசதிகள் இருந்தும் நிம்மதி இல்லாமல் அலைவதுதான் மனித வாழ்க்கையாகிப் போனது. அன்பு, கருணை, ஈவு, இரக்கம் என்பதெல்லாம் வெறும் எழுத்தளவில்தான் உலகில் இருந்து வருகிறது.

இந்தோனேசியாவில் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜகார்த்தாவில் பின்தங்கிய கிராமத்தில் வசித்து வந்த செரோடின் (46) என்ற பெண்ணுக்கு விசித்திரமான தோல் நோய் ஏற்பட்டு உடல் முழுவதும் சிறு சிறு கட்டிகளுடனும் முகத்தில் சதை வளர்ந்தும் காணப்பட்டார்.

நான்கு பிள்ளைகளின் தாயான இவர் கடந்த மூன்று வருடங்களாக இந்நோயினால் அவதிப்படுகிறார். இந்த நோய் ஏனையோருக்கும் தொற்றக்கூடும் என்ற அச்சத்தில் அவரை கிராமத்திலிருந்து ஒதுக்கி வைக்க தீர்மானித்ததால் அப்பெண் பெரும் கவலையடைந்துள்ளார்.

தனது கிராமத்தில் மருத்துவ வசதிகள் குறைவாக உள்ளமையினால் மருந்து வகைகளை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோங் சன்சைஹோங் சன்சை1இதேப்போன்று சீனாவில் மிகவும் பின் தங்கிய கிராமத்தில் உள்ள “ஹோங் சன்சை” என்ற 32 வயதுடைய இளைஞனுடைய முகத்தில் 23 கிலோ தேவையற்ற சதைகள் காணப்படுகின்றன. இதை ஆராய்ந்த மருத்துவ நிபுணர்கள் இது அவரின் நிறமூர்த்தம் விகாரம் காரணமாக இச்சதைகள் வளர்ச்சி அடைவதாக தெரிவிக்கின்றனர். இதை அகற்ற குறைந்தது ஆறு தடவைகள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்சனை காரணமாக தன்னால் ஒரு வேலையும் செய்ய முடியாமல் உள்ளதாகவும் என் முகம் பார்பதற்கு மிகவும் பயங்கரமாக உள்ளதால் எமது பகுதி மக்கள் என்னுடன் பழகுவதற்கே பயப்படுவதாகவும் கவலைப்படுகிறார்.

 juliana_1juliana_

இதேப்போன்று அமெரிக்காவில் பிறந்த பெண்குழந்தை ஜீலியானா இவரது தந்தை ஒரு கடற்படை அதிகாரி. அவரது அம்மா ஒரு ஆசிரியை. ஆனால் இவருக்கு பிறந்த குழந்தையோ முகம் முழுமையாக இன்றி முற்றிலும் சிதைத்த நிலையில் பிறந்துள்ளது

குழந்தையின் அசாதாரண நிலைமைய கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு இது முற்றிலும் மாறுபட்ட ஒரு சம்பவம் எனவும் தெரிவித்தனர். இச்சிறுமியின் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த மருத்துவர்கள் சாதாரண மனிதனின் முகத்தில் காணப்படுகின்ற சதை எழும்புகளில் இவருக்கு 40% சதவீத எழும்புகள் இல்லாமல் காணப்படுவதாக தெரிவித்தனர். மேலும் சிறுமியின் தாடை, பற்கள், காது, கண்கள் ,மூக்கு என அத்தனை அங்கங்களும் வினோதமான முறையில் அமைந்துள்ளது. இவரின் இந்நிலைமை தொடர்பில் பெற்றோர்கள் பெரிதும் கவலைப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதுவரை 20 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனினும் சத்திர சிகிச்சை மூலம் ஒருபோதும் முற்றிலுமாக சரிசெய்ய முடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். சிறுமி ஜீலியானா குழாய் மூலமாகவே சுவாசித்து வருகிறார்.

உலகில இன்னும் ஏராளமான நபர்கள் இது போன்ற பாதிப்புகளுக்கு  உள்ளாகியுள்ளனர் என்பது அதர்ச்சி தரும் தகவலாக இருக்கின்றது.