சென்னையில் மோடியை சந்தித்த வைகோ!

Vaiko -modiகுஜராத் மாநிலத்தின் முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியை 08.02.2014 சனிக்கிழமை இரவு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்தார்.சென்னை அருகே வண்டலூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு வைகோசெல்லவில்லை.

தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையாத நிலையில் நரேந்திரமோடியுடன் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டால், பிறகு தொகுதி பங்கீட்டில் தான் ஏமாற்றப்படலாம் என்ற எச்சரிக்கை உணர்வில் தான் வைகோ பொதுக்கூட்டத்திற்கு செல்லாமல், தனது கட்சி நிர்வாகிகளை மட்டும் பொதுக்கூட்டத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, தனிப்பட்ட முறையில் நரேந்திரமோடியை வைகோ சந்தித்து பேசியுள்ளார்.