நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று (17.05.2014) வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “16 வது மக்களவை தேர்தலில் பெற்றுள்ள மகத்தான வெற்றிக்காக, நான் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களது தலைமையிலான அரசில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இருக்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.