ஆடிப்பூரம் நிகழ்வு ஆண்டாளின் பெருமையை சொல்லும் விஷேட நிகழ்வு, திருவரங்கம் அரங்கநாத சாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும் உற்சவம் ஆகும். 30.07.2014 அன்று ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருவரங்கம் அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் அமைந்துள்ள வெளி ஆண்டாள் சந்நிதியில் ஆண்டாள் அலங்காரம் ரூபத்தில் எழுந்தருளினார்.
அதேசமயம், ஒவ்வொரு ஆண்டும் திருவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு சீர்வரிசை கொண்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டும் ஆடிப்பூர நிகழ்வை முன்னிட்டு ஆண்டாளுக்கு சீர்வரிசை கொண்டு சென்று ஆண்டாளுக்கு அணிவிக்கப்படுகிறது.
-ஆர்.பி.சங்கர ராமன்.