ஜெ.ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (07.10.2014) பெங்களூர் ஐகோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஐகோர்ட் நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா முன்னிலையில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற இருக்கிறது. 73-வது வழக்காக இந்த மனு விசாரிக்கப்படும் என்று பெங்களூர் ஐகோர்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த வரிசைப்படி நடந்தால் ஜெ.ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று பிற்பகலில்தான் நடைபெறும்.
இதற்கிடையே ஜெ.ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு முன்னுரிமை கொடுத்து, அதை காலையிலேயே எடுத்துக் கொள்ள கோரிக்கை மனு கொடுக்க அ.தி.மு.க. வக்கீல்கள் திட்டமிட்டுள்ளனர். அதை நீதிபதி சந்திர சேகரா ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், ஜாமீன் மனு மீதான விசாரணை முன்னதாக நடைபெறும். இல்லையெனில் பிற்பகலில்தான் விசாரணை நடைபெறும்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in