ஜெ.ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது கர்நாடக ஐகோர்ட்டில் இன்று (07.10.2014) நீதிபதி சந்திரசேகரா முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. ஜெ.ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், நீதிபதி சந்திரசேகரா, ஜெ.ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.
தற்போதைய சூழலில் ஜாமீன் வழங்க முடியாது என்றும், அவசரமாக ஜாமீன் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதி சந்திரசேகரா தெரிவித்துள்ளார். இதனால் தமிழகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in