அழிந்து வரும் காட்டெருமைகள்!

kattarumaikattarumai1சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 2,427 ஹெக்டேர் பரப்பளவு காடுகள் இருக்கிறது. தமிழகத்திலேயே அதிகவிலான காட்டெருமைகள் இங்குதான் வாழ்ந்து வருகிறது. இங்குள்ள தனியார் எஸ்டேட்களில்தான் காட்டெருமைகள் அதிகளவில் வாழ்ந்து வந்தன. ஆனால் இப்போது வாழ்வதற்கு வழில்லாமல் அவதிப்பட்டு அழிந்து வருகிறது.

kattarumai2இங்கு விளையும் காபி, மிளகு, கமலாஆரஞ்சு உள்ளிட்டவைகளை காட்டெருமைகள் சாப்பிடுவது கிடையாது, ஆனால், காட்டெருமை சில சமயங்களில் ஆக்ரோஷமாக கமலாஆரஞ்சு செடிகளை முட்டி முறித்து விடும். இதுதான் காட்டெருமைகள் எஸ்டேட்களில் ஏற்படுத்தும் நஷ்டங்கள் ஆகும்.

kattarumai3இதனால், பல எஸ்டேட்களில் காட்டெருமைகளை வெளியேற்றி மீண்டும் உள்ளே நுழையாமல் தடுக்க எஸ்டேட்டை சுற்றி கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுநாள் வரை காட்டெருமைகள் பழகிபோன வழி தடத்திலேயே உணவு மற்றும் தண்ணீரை தேடி சென்று விட்டு மீண்டும் அதன் வாழ்விடத்திற்கு வந்து சேர்ந்து விடும்.

ஆனால், தற்போது காட்டெருமைகளை எஸ்டேட்களில் இருந்து வெளியேற்றி புதிய இடத்திற்கு துரத்தப்பட்டதால், இவைகள் உணவு தேடி செல்லும் இடங்களில் தவறி கிணற்றில் விழுந்து உயிர் இழக்கின்றன.

கடந்த ஞாயிற்றுகிழமை ஏற்காடு போட்டு காடு கிராமத்தில் உணவு தேடி சென்ற காட்டெருமை ஒன்று கிணற்றில் விழுந்து உயிரிழந்தது குறிப்பிடதக்கது.

இரவு நேரங்களில் தங்களின் பழைய வாழ்விடங்களுக்கு செல்ல வழியில்லாமல், அந்தந்த எஸ்டேட்களின் வெளியே சாலையில் நின்று வருகிறது. அச்சமயம் அந்த வழியில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் காட்டெருமைகளை கண்டு பயந்து கீழே விழும் நிகழ்வுகளும் ஏற்பட்டு வருகிறது.

காட்டெருமைகள் ஊருக்குள் வருவதை தடுக்க, ஏற்காடு வன துறையினர் காட்டெருமைகள் விரும்பி சாப்பிடும் புற்களை ஏற்காட்டின் வனப்பகுதியில் வளர்த்து வருகின்றனர். இருப்பினும் இவைகள் ஊருக்குள் வருவது குறைய இல்லை.

எனவே, காட்டெருமைகளை காப்பாற்றும் வகையில் ஏற்காட்டில் உள்ள அடர்ந்த காடுகளில் காட்டெருமைகளுக்கென தனி சரணாலயம் ஏற்படுத்தினால்தான், காட்டெருமைகளும் நிம்மதியாக வாழ முடியும். மக்களும் அச்சமின்றி நடமாட முடியும்.

-நவீன் குமார்.