திமுக தலைவர் மு.கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்களை தயாரித்த கள்ள லாட்டரி குற்றவாளி மார்ட்டின் சொத்துக்கள் முடக்கம்!

august-2011-santiago martine -arrested-in-salem-for-land-grabbing-case

lottery

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற லாட்டரி ஊழல் தொடர்பாக, மார்ட்டின் நிறுவனத்தின் ரூ.122.40 கோடி சொத்துக்களை முடக்கி மத்திய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ED

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு லாட்டரி விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்தது. ஆனாலும், மாநில அரசின் மூத்த அதிகாரிகளின் உதவியுடன் லாட்டரி விற்பனை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல், அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த ஊழல் தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”எஸ்.மார்ட்டின் மற்றும் என்.ஜெயமுருகன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் தமிழ்நாட்டின் கோவை நகரில் உள்ள டாய்சன் லேண்ட் அண்ட் டெவலப்மெண்ட், சார்லஸ் ரியால்டர்ஸ், மார்ட்டின் மல்டி புரொஜெக்ட்ஸ், டாய்சன் லக்சுரி வில்லாஸ் ஆகிய 4 நிறுவனங்களும் லாட்டரி ஊழலில் தொடர்புடைய மார்ட்டினுக்கு சொந்தமானவை என்பது அடையாளம் காணப்பட்டு இருக்கிறது.

மேலும், அமலாக்கத் துறையின் விசாரணையில் இவை அனைத்துமே லாட்டரி ஊழல் மூலம் வாங்கப்பட்ட சொத்துகள் என்பதும் தெரிய வந்துள்ளது. அதனால், இந்த 4 நிறுவனங்களின் ரூ.122 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் முடக்கி வைக்கப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

யார் இந்த மார்ட்டின்? விரிவாக பார்ப்போம்:

ilaignan_audio_launch_stills2

ilaignan_audio_launch_stills_ karunanithi with martineilaignan_audio_launch_stills4 ilaignan_audio_launch_stills3

நாடு முழுவதும் லாட்டரி சீட்டு மோகம் அதிகரித்த நேரத்தில் நிறைய பேர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். பலர் சொத்துகளை இழந்து வறுமையில் வாடினர். இதைத் தொடர்ந்து, ஓர் இலக்க லாட்டரி, ஆன்-லைன் லாட்டரி என மக்களின் உழைப்பைச் சுரண்டும் வகையிலான அனைத்து வகையான லாட்டரி சீட்டுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என பல அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் அப்போது தொடர்ந்து கோரிக்கை விடுத்தன. 

1999-ம் ஆண்டு டிசம்பரில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியின் போது லாட்டரி தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதை எதிர்த்து லாட்டரி வியாபாரிகள் நீதிமன்றம் சென்றதால் இதுகுறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. 

அதன்பிறகு பா.ஜ.க. ஆட்சிக் காலத்திலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்திலும் இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டப்படவில்லை. 

ஏறத்தாழ எல்லா மாநிலங்களுமே லாட்டரிச் சீட்டு விற்பனையை நடத்தி வந்தன. பல மாநிலங்கள் லாட்டரிச் சீட்டை அச்சடித்து விற்கும் பொறுப்பை லாட்டரி ஏஜென்டுகளிடம் விட்டிருந்தன. எனவே, போலி லாட்டரிச் சீட்டுகளை அச்சடித்து விற்பது போன்ற சட்டவிரோதச் செயல்கள் மூலம் லாட்டரி முதலாளிகள் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்தனர். 

லாட்டரியில் பரிசு கிடைத்தால் பணக்காரர் ஆகலாம் என்று அதிர்ஷ்டத்தை நம்பிய, பலரும் பரம ஏழைகளாகிவிட்டனர். 

லாபம் சம்பாதித்து வந்த முதலாளிகள், இந்தத் தடை மசோதா மறுபடியும் நாடாளுமன்றத்துக்கு வராத வகையில் பார்த்துக் கொண்டனர். 

ஆனால், தமிழகத்தில் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2003-ல் லாட்டரிக்குத் தடை விதிக்கப்பட்டது. லாட்டரியில் பணம் இழந்து தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை நின்று போனது. 

அதுவரை லாட்டரித் தொழிலில் இருந்தவர்கள், ஆயத்த ஆடை வியாபாரம் போன்ற மாற்றுத் தொழிலுக்கு மாறினர். ஆனாலும் லாட்டரி முதலாளிகள் மட்டும், மறுபடியும் லாட்டரி தொழிலை அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை விடுப்பது, பேரணிகள் நடத்துவது, ஆட்சியாளர்களை சந்தித்து வலியுறுத்துவது என இருந்தனர். இதில் முக்கியமான நபராக மார்ட்டின் இருந்தார்.

இந்நிலையில் 2006-ல் திமுக  வெற்றிப் பெற்று மு.கருணாநிதி முதல்வரானார். கள்ள லாட்டரி முதலாளிகளில் முக்கியமானவராகக் கருதப்படும் மார்ட்டினுடன் முதல்வர் மு.கருணாநிதி கைகோர்த்தார்.

முதல்வர் மு.கருணாநிதி திரைக்கதை எழுதிய “இளைஞன்”, “பொன்னர் – சங்கர்” போன்ற திரைப்படங்களை மார்ட்டின் தயாரித்தார்.

இளைஞன் படத்திற்கு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி திரைக்கதை எழுதினார். கவிஞர் பா. விஜய் கதாநாயகனாக நடித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி பின்னி மில் வளாகத்தில் தொடங்கியது. அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். 

இதற்கு விசுவாசமாக லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு அனுமதி அளிக்கும் மசோதாவை கொண்டு வர முதல்வர் மு.கருணாநிதி தீவிரமாக முயற்சித்தார்.

அதற்காக அப்போது முதல்வராக இருந்த மு.கருணாநிதி, தில்லி சென்று திட்டக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இது குறித்து பேசினார். 

அதுவரை 10 ஆண்டுகளாக தாமதமாகி வந்த லாட்டரிகளுக்குத் தடை விதிக்க வகை செய்யும் மசோதாவை 2010 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வாபஸ் பெற்றார். லாட்டரி தடை சட்டம் என்பதற்குப் பதிலாக, லாட்டரி ஒழுங்குமுறை என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. 

லாட்டரி தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஒழுங்குமுறை அமைப்பு ஒன்றை உருவாக்க உயர் நிலை ஆய்வுக் குழு பரிந்துரை செய்திருப்பதாக மாநிலங்களவையில் ப. சிதம்பரம் கூறினார்.

இதனால் தமிழகத்தில் மீண்டும் லாட்டரி விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் 2011 சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க அமோகமாக வெற்றிப்பெற்றது. தமிழகத்தில் ஜெ.ஜெயலலிதா முதல்வரானார். லாட்டரி விற்பனை தடுத்து நிறுத்தப்பட்டது.

சென்னை, திருவல்லிக்கேணியில் லாட்டரி டிக்கெட் விற்று வந்த மார்டின் இன்றும் லாட்டரி தொழிலில் படு பிசிதான். போலி லாட்டரி விற்பனையின் சூத்திரதாரி என மார்ட்டின் இன்றும் அழைக்கப்படுகிறார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒரு கவர்னருக்குக் கூட அந்த அளவிற்கு மதிப்பு, மரியாதை இருக்காது. ஆனால், மார்டின் சென்றால் அமோக வரவேற்பு தான்.

எஸ்.எஸ்பெயரில் டிவி செனல், ஆன்லைன் லாட்டரி முதலியவற்றில் கோடிகளை அள்ளி அவற்றை, ‘மார்ட்டின் புரமோட்டர்ஸ்என்ற பெயரில் நிலத்தில் போட்டு, செல்வத்தை வளர்த்த வித்தைக்காரர்.

தமிழகத்தில், 2003-ல் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதும், பிற மாநிலங்களில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்.

தி.மு.க., ஆட்சியில், லாட்டரி சீட்டு விற்பனையை மீண்டும் கொண்டு வர பல விதங்களில் முயற்சி செய்தார்.

 ‘ஆன் – லைன்’ வியாபாரம், ‘லாட்டரி இன்சிடர்.காம்’ என்ற இணையதளம் வாயிலாகவும் லாட்டரி விற்பனையை நடத்தி வந்தார்.

மகாராஷ்டிரா, சிக்கிம், நாகாலாந்து, பஞ்சாப், மேகாலயா மாநிலங்களில், லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் உரிமம் பெற்று இருந்தார்; பூடான் லாட்டரியின் அகில இந்திய ஏஜன்டாகவும் செயல்பட்டார்.

கோவையில், மனைவி பெயரில் ஒரு துணிக்கடை, செவிலியர் கல்லுாரி மற்றும், ‘மார்ட்டின் புரமோட்டர்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் நடத்தினார்.

ஆண்டுக்கு, 7,200 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்த இவர், 2008-ல், 2,112 கோடி ரூபாய் சேவை வரி செலுத்தவில்லை என, வருமான வரித்துறை சுட்டிக் காட்டியது.

கடந்த 2011ல், நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். போலி லாட்டரி விற்பனை செய்தது உட்பட, 13 வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஏழு மாத காலம் சிறையில் இருந்த பின், ஜாமினில் வெளியே வந்தார்.

வரி ஏய்ப்பிலும் மார்டினின் கம்பெனிகள் சம்பந்தப் பட்டுள்ளன. பர்மாவிலிருந்து வந்த மார்டின் சட்டத்திற்கு புரம்பாக லாட்டரி சீட்டு விற்பனை நடத்தி சம்பாதித்துள்ளது ரூ. 7200 கோடிகள். இரண்டு  முறை சட்டரீதியில் நடவடிக்கை எடுத்தும், குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டும் சுதந்திரமாக திரிந்து வருவதுதான் மார்டினின் திறமை. அது மட்டுமல்லாது, FICCI எனப்படுகின்ற இந்தியாவின் முக்கிய வியாபார நிறுவனத்தின் அங்கமான அனைத்திந்திய லாட்டரி வியாபார மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்துறை கூட்டமைப்பு (All India Federation of Lottery Trade and Allied Industry) என்பதில் அபரீதமான பங்கு வகிப்பதும் தெரிந்த விஷயமே.

மார்ட்டினின் அரசியல் பின்னணி: ஆரம்ப காலங்களில் சென்னையில் லாட்டரி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, திமுக கட்சியுடன் மார்டின் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். இவரது மனைவி லீமா ரோஸ், பாரி வேந்தரின் ஐ.ஜே.கே.வில் உள்ளார். மகன் பி.ஜே.பி.யில் சேர்ந்துள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவில் சேர மார்ட்டின் முயற்சி செய்தார். ஆனால், அவரை சேர்க்கக் கூடாது என தமிழக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

charles martin

இருந்தாலும் ஆடு பகை குட்டி உறவு என்ற பழமொழிக்கு ஏற்ப, மார்ட்டினின் மகன் சார்லஸ், பா.ஜ.க பொதுச்செயலாளர் ராம்மாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

கள்ள லாட்டரியின் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த நபருடன், கூட்டுக் களவாணிகளாக இருந்து செயல்பட்ட நபர்கள், இன்று அரிசந்திரனைப் போல நாடகமாடி, மீண்டும் ஆட்சிப் பொறுப்பிற்கு வர நினைப்பது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com