திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சிந்தாமணி காவிரி பாலம் இணையும் இடத்தில் புதிதாக கட்டப்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ள ஓடத்துறை மேம்பாலத்தில் ஒரு மின் கம்பம் சாய்ந்தபடியே ஆபத்தான நிலையில் உள்ளது. மின் கம்பத்தின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 4 போல்ட் நட்டுகளில் 2 போல்ட் நட்டுகளை காணவில்லை. இதனால் மின் கம்பம் சாய்ந்தபடியே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் மேம்பாலத்தில் செல்லும் வாகனங்களுக்கும் மற்றும் பயணம் செய்யும் பொதுமக்களுக்கும் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுக்குறித்து இன்று (18.01.2017) மாலை 6.50 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்திற்கு 0431-2415329 என்ற தொலைபேசிக்கு பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால், யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. அதன் பிறகு ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தின் 9047196204 என்ற அலைபேசிக்கு பலமுறை தொடர்பு கொண்டோம். யாரும் எடுக்கவில்லை. அதன் பிறகு ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்திற்கு 0431-2432255 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொண்டோம். அதிஷ்டவசமாக தொலைபேசியை எடுத்த அலுவலரிடம் விபரத்தை சொன்னோம். அக்கறையோடு புகாரை குறித்து கொண்டார். நேரில் ஆட்களை அனுப்பி சரி செய்வதாகவும் உறுதி அளித்தார்.
போர்கால அடிப்படையில் சரி செய்தால் புண்ணியமாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com