ஆட்டோ, டேக்ஸி ஓட்டுநர்களுக்கு காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்!- ஏற்காட்டில் நடைப்பெற்றது.

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

ஏற்காடு காவல் நிலையத்தில், ஏற்காடு பஸ் நிலையம், காந்தி பூங்கா, அன்னா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆட்டோ, டேக்ஸி, வேன் உள்ளிட்ட சுற்றுலா வாகன ஓட்னர்களிடம் ஆலோசனை கூட்டம், ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் நடைப்பெற்றது. உதவி ஆய்வாளர் மைக்கல் ஆண்டனி உட னிருந்தார்.

ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் பேசியதாவது:

“ஏற்காட்டில் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துக்கொண்டே போகிறது. சுற்றுலா பயணிகளை முதலில் சந்திக்கும் நபர்கள் நீங்கள்தான். எனவே, நீங்கள் ஓட்டுனர் சீருடை அணிந்திருக்க வேண்டும், வாகனத்தை நல்ல தராமான நிலையிலும், சுத்தாமகவும் வைத்திருக்க வேண்டும். சுற்றுலா பயணிகளிடம் சுமூகமான முறையிலேயே அணுக வேண்டும். மேலும், சுற்றுலா பயணிகளிடம் இருந்து உங்கள் மீது புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு பேசினார்.

ஏற்காட்டில் பல ஆட்டோ மற்றும் கார்கள் டேக்ஸி உரிமம் இல்லாமலும், முறையான ஆவணங்கள் இல்லாமலும் ஓட்டப்படுவதாகவும், அவற்றை தடுக்க வேண்டும் என கூட்டத்தில் ஓட்டுனர்கள் புகார் தெரிவித்தனர்.

-நவீன்  குமார்.

 

Leave a Reply