விபத்துக்கு காரணமாக இருக்கும் திருவெறும்பூர் பெல் (BHEL) ரவுண்டானா!- வேடிக்கைப் பார்க்கும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்.

TVR-BHEL


TVR BHEL-2

TVR BHEL-1திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கணேசபுரத்தில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பெல் (BHEL) ரவுண்டானா உள்ளது. அந்த ரவுடண்டானா அளவுக்கு அதிகமாக பெரியதாக உள்ளதால், திருச்சியிலிருந்து- தஞ்சை நோக்கி செல்லும் வாகனங்களும், தஞ்சையிலிருந்து- திருச்சி நோக்கி செல்லும் வாகனங்களும், அந்த இடத்தை கடக்கும் போது நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில், இன்று இரவு கும்பகோணத்திலிருந்து கரூர்-க்கு தேங்காய் உரிமட்டைகளை ஏற்றி வந்த லாரி பெல் (BHEL) ரவுண்டானாவில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் மற்றும் பெல் (BHEL)  காவல்துறையினர், திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்பு வாகன (கிரைன்) உதவியுடன் மீட்டனர். மேலும், சாலையில் சிதறிக் கிடந்த தேங்காய் உரிமட்டையையும் அப்புறப்படுத்தினர். இதனால் திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கரூர் செட்டிபாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் பழனிவேல(47) என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

 

Leave a Reply