எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி தேசியக் கல்லூரியில் நடைப்பெற்றது!

IMG-20180107-WA0002 IMG-20180107-WA0004 IMG-20180107-WA0005 IMG-20180107-WA0006 IMG-20180107-WA0007 IMG-20180107-WA0008 IMG-20180107-WA0009 IMG-20180107-WA0010 IMG-20180107-WA0011 IMG-20180107-WA0012 IMG-20180107-WA0013

கல்லூரி கல்வி இணை இயக்குநர் ஆணையின்படி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி தேசியக் கல்லூரியில் மாநில அளவில் போட்டிகள் நடைபெற்றன. இதனை தேசியக் கல்லூரியின் விளையாட்டுத்துறை நடத்தியது. போட்டிகள் 04.01.2018 முதல 06.01.2018 வரை நடைபெற்றது.

தேசியக் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சுந்தரராமன் ஒவ்வொரு நாட்களும் விளையாட்டு போட்டிகளைத் துவக்கி வைத்தார். 04.01.2018 அன்று நடைபெற்ற கோ கோ போட்டியில் முதல் பரிசு சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியும், இரண்டாம் பரிசு கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியும், மூன்றாம் பரிசு கரூர் அரசு கலைக் கல்லூரியும் பெற்றன.

05.01.2018 அன்று நடைபெற்ற கபாடி போட்டியில் முதல் பரிசு திருச்சி ஜமால் கல்லூரியும், இரண்டாம் பரிசு கரூர் அரசு கலைக்கல்லூரியும், மூன்றாம் பரிசு முக்குளத்தூர் அரசு கலைக் கல்லூரியும் பெற்றன.

06.01.2018 அன்று நடைபெற்ற ஒருவருக்கான மற்றும் இருவருக்கான இறகுப் பந்து போட்டிகளில் முதல் பரிசு வாணியம்பாடி, இஸ்மாலிய கல்லூரியும், இரண்டாம் பரிசு சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியும், மூன்றாம் பரிசு மேலசிவபுரி கணேசன் அரசு கலைக் கல்லூரியும் பெற்றன.

விளையாட்டுப் போட்டிகள் அனைத்தையும் தேசியக் கல்லூரியின் விளையாட்டுத்துறை பேராசிரியர்கள் பூபதி மற்றும் லைஸ்ராம் ஷீலாதேவி ஆகியோர் நடத்தினார்கள்.     

-ஆர்.மார்ஷல்.

எஸ்.ஆனந்தன்.

Leave a Reply