சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இன்று அதிகாலை முதலே சாரல், மதியம் வரை தொடர் சாரல் மழை பெய்தது. மேலும், ஏற்காடு மலைப்பகுதி முழுவதும் அடர் பனி மூட்டம் நிலவியது. சாலைகளில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. 5 அடி தொலைவில் உள்ளவர்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவி வந்தது.
மதியம் 1 மணிக்கு மேல் பனிமூட்டம் விலகியது. இன்று காலை நிலவிய பனி மூட்டத்தால் பலர் வேலைக்கு செல்வதை தவிர்த்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
-நவீன்குமார்.