திருச்சி விமான நிலையம் அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில், ஒவ்வொரு புதன்கிழமையும் “அம்மா வார சந்தை” செயல்பட்டு வருகிறது. இங்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் நியாயமான விலையில் பசுமையாக விற்பனை செய்யப்படுகிறது.
சூப்பர் மார்கெட்களில் பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை அதிக விலைக்கொடுத்து வாங்கி சாப்பிடுவதைவிட, இந்த வார சந்தையில் வாங்கினால் தரமாக இருக்கும். இதன் மூலம் ஏழை விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் பயனடைவார்கள். இதனால் உள்ளுர் பொருளாதாரம் மேம்படும்.
-ரா.ரிச்சி ரோஸ்வா.