திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் திருநாளுக்கு அடையாளமாக விளங்க கூடிய கரும்பு, வாழைப்பழம், மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துகளின் விற்பனை சூடுபிடித்து ள்ளது.
தமிழ் நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த ஒருவார காலமாக வேலை நிறுத்ததில் ஈடுப்பட்டு தற்பொழுது வாபஸ் பெற்ற நிலையில் திருவாரூர் பகுதியில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பு, வாழைப்பழம், மசால் மற்றும் இஞ்சிகொத்து விற்பனை விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் வடக்கிழக்கு பருவ மழை ஓரளவிற்கு பெய்திருந்தாலும், விவசாயம் பெருமளவிற்கு பாதிப்படைந்த நிலையில் வாழை மற்றும் கரும்பு வெளி மாவட்டத்திலிருந்தும், வெளி மாநிலத்திலிருந்தும் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யபட்டு வருகிறது.
கரும்பு விலை ரூபாய் நூற்று ஐம்பது முதல் இருநூறு வரையிலும் மஞ்சள் மற்றும் இஞ்சிகொத்து ரூபாய் இருபது வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வாழைப்பழம் மட்டும் தார் ஒன்று ரூபாய் 250 முதல் ரூபாய் 2,500 வரை விற்கபடுகிறது.
பொதுவாக வாழைப்பழங்களில் பூவம், பச்சை, கர்ப்பூரவல்லி, ரஸ்த்தாளி, செவ்வாழை போன்ற வாழைப்பழங்கள் விற்பனைக்கு உள்ளது. குறிப்பாக வாழைப்பழம் தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவையாறு, சுந்தரபெருமாள் கோயில் பகுதியிலிருந்தும் ஆந்திரா, கர்னாடகா மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலத்திலிருந்தும் வரவழைக்கக்கபட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-ஜி.ரவிச்சந்திரன்.