சரக்கு வாகனங்களில் உயிரை பணயம் வைத்து செல்லும் மக்கள்! – வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள்.

IMG_20180113_114341

இந்தியாவில் பயணிகள் போக்குவரத்துக்கென்று பல விலை மதிப்புள்ள வாகனங்கள் இருந்தும், நமது மக்கள் இன்றும் முற்றிலும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். காரணம், பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்கான கட்டண உயர்வே.

வெகுஜன மக்களின் பாதுகாப்பிற்காக நமது அரசாங்கம், சரக்கு மற்றும் கனரக வாகனதிர்கென்று சட்டங்களை இயற்றினாலும், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அதனை சரியாக பின்பற்றாத காரணத்தினால் விலைமதிப்பில்லாத பல உயிர்களை இழக்கும் நிலை உருவாகிறது.

இதற்கான சட்டங்கள் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, அவர்களை மிரட்டி அபராத கட்டணம் வசூல் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அங்காங்கே செய்யப்படும் வாகன சோதனைகளே உதாரணம்.

இந்த நிலைமை மாறவேண்டுமானால் நகரம் மட்டுமல்லாமல், கிராமங்களிலும் அதிகமான எண்ணிக்கையில் சிற்றுந்து மற்றும் பேருந்துகளின்  எண்ணிக்கை உயர்த்தப்படவேண்டும். இதன் மூலம் மட்டுமே விலைமதிப்பில்லா மக்களின் உயிர் இழப்பை தவிர்க்க முடியும். மேலும், பேருந்தின் தரம் உயர்த்தப்பட வேண்டும். இதன் மூலம் மக்கள் பேருந்தில் மட்டுமே எளிதாக அனைத்து இடங்களுக்கும் செல்லும் நிலை உருவாகும். 

-க.மகேஷ்வரன்.

Leave a Reply