பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், சூரியூரில் இன்று ஜல்லிகட்டு போட்டி நடைப்பெற்றது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை,கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 600 காளைகளும், 50 உள்ளுர் காளைகளும், ஆக மொத்தம் 650 காளைகள் போட்டியில் கலந்துக்கொண்டன.
ஜல்லிகட்டு காளைகளை அடக்குவதற்காக மொத்தம் 500 மாடு பிடி வீரர்கள் களமிறங்கினர்.
நருங்கடல்குடி கருப்பண்ணசாமி கோவில் காளை, சின்ன சூரியூரை சேர்ந்த மாரியம்மன்கோவில் காளை முதலில் அவிழ்தப்பிறகு, உள்ளுர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன் பிறகு முறைபடி மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 150 வீரர்கள் ஒரு பேஜ் என்ற கணக்கில், மாடு பிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.
ஜல்லிகட்டு காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 8 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 9 பேரும், பார்வையாளர்கள் 10 பேர் என மொத்தம் 27 பேர் காயமடைந்தனர்.
இதில் புலியூரை சேர்ந்த ராமன்(40), தில்லைநகர் இம்ரான்(22), ஓலையூர் மணிக்குமார்(24), விராலிமலையை சேர்ந்த அழகர்(35) ஆகிய 4 பார்வையாளர்களும், கூத்தைப்பாரை சேர்ந்த மாடுபிடி வீரர் சுப்பிரமணி(23), மாட்டின் உரிiமாயாளர்கள் அசூரை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங், புதுக்குடி செல்வராஜ் ஆகிய இரண்டு பேர் உள்பட மொத்தம் 7 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்களை திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், மாடுகளுக்கும் தங்ககாசு. சைக்கிள், பீரோ, கட்டில், குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில் மிக சிறந்த மாடு பிடி வீரர் ஒருவருக்கும், மிக சிறந்த காளை ஒன்றிற்கும் பைக் வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிகட்டு விழாவிற்கு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி தலைமை வகித்தார்.
இதில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மக்களவை உறுப்பினர் பி.குமார், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பொ.மகேஷ் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் போட்டியைக் கண்டு களித்தனர்.
துணை ஆட்சியர் கமல்கிஷோர், திருவெறும்பூர் வட்டாட்சியர் ஷோபா உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், முன்னதாக திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமாறன் தலைமையில், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள், மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்து சான்றிதழ்கள் வழங்கியதோடு, மாடுகள் முட்டியதில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் அளித்தனர்.
கால்நடை மருத்துவ மாவட்ட உதவி இயக்குநர் எஸ்தர் சீலா தலைமையில், ஜல்லிகட்டு மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்பட்டது.
கால்நடைத்துறை இணை இயக்குநர் முருகேசன் மற்றும் கால்நடைத்துறை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறையிலிருந்து மாடுகள் அடிப்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.
அதேப்போல் தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் கருணாகரன் நவல்பட்டு நிலைய அலுவலர் பரமேஷ்வரன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வாகனம் தயர்நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.
பொதுபணித்துறை அதிகாரி அன்பரசி தலைமையிலான குழுவினர் தடுப்பு வேலிகளை ஆய்வு செய்தனர்.
ஜல்லிகட்டு மாடுகள் ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொண்டப்பிறகு வெளியில் வந்து பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாமல் தடுக்கும் பொருட்டு ஜல்லிகட்டு மாடுகள் களத்தை விட்டு வெளியில் வரும் போதே காளைகளை பிடிக்க தடுப்பு வேலிஅமைக்கப்பட்டிருந்தது உண்மையிலுமே பாரட்டத்தக்கது.
-ஆர்.சிராசுதீன்.