திருச்சியில் ஒரே இரவில் 3 கடைகளை உடைத்து கொள்ளை!  திறப்பு விழா காண்பதற்கு முன்பே பயணியர் நிழற்குடையில் இருந்த பேட்டரியை திருடி சென்ற கொள்ளையர்கள்!

திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள மஹாலெட்சுமி நகரை சேர்ந்தவர் அப்துல்பாரூக்(68) இவர் அதேப்பகுதியில் உள்ள தனரெத்தினம் நகரில் மெடிக்கல் மற்றும் சூப்பர் மார்கெட் வைத்துள்ளார். இவர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை கடையை திறக்க வந்து பார்த்தப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் உள்ளே இருந்த கல்லாப்பெட்டியை கடப்பாறை கொண்டு நெம்பி திறந்து கள்ளப்பெட்டியில் இருந்த ரூ 30 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அந்த கடையின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

அதேப்போல் அந்த கடைக்கு எதிரே உள்ள பெட்டிகடை மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடையை நடத்தி வருபவர் விக்னேஷ் குமார்(28), இவரது கடையின் பூட்டை உடைத்து கள்ளபெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் 6 ஈசி செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், விக்னேஷ்குமார் நேற்று தான் கடனாக ரீசாஜ் செல்போன்களில் 7 கம்பெனி போன்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் ஈசி பணம் ஏற்றியுள்ளார்.

இதேப்போல் எடலைப்பட்டி புதுரை சேர்ந்த கார்த்திக் தனரெத்தினம் நகரில் மார்பிள் கடை வைத்துள்ளார். அந்த கடையில் நுளைந்த திருடர்கள் அந்த கடையில் இருந்த கதவை கடப்பாரையால் நெம்பி உடைத்து உள்ளே இருந்த கள்ளப்பெட்டியையும் நெம்பி உடைத்து கள்ளபெட்டியில் இருந்து ரூ.5ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஒரே நேரத்தில் 3 கடைகளில் நடந்த கொள்ளைச் சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து காந்தி மார்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்தனர்.

இதேப்போல் பொங்கல் தினத்தின் முதல் நாள் அன்று மஹாலெட்சுமி நகரில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர்  பொ.மகேஷ் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ.5 லட்சம் செலவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பயணியர் நிழற்குடை அமைத்துள்ளார்.

அந்த நிழற்குடையில் சோலார் லைட் பேட்ரியை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். திறப்பு விழா காண்பதற்கு முன்பே நடந்துள்ள இந்கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனைக்கும் அந்தப்பகுதி எப்போதும் பொது மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து 24 மணி நேரமும் உள்ள பகுதியாகும். இச்சம்பவம் குறித்தும் காந்திமார்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்.சிராசுதீன்.

Leave a Reply