ஆறு மற்றும் கால்வாய்கள் தூர்வாராததால் கடைமடை விவசாயிகள் பரிதவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில், வெட்டாறு, வெண்ணாறு, சோழ சூடாமணியாறு, புத்தாறு போன்றவை பாய்ந்து வருகிறது. இவற்றில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்கள் மூலம் விவசாயிகள் விவசாயம் செய்வது வழக்கம்.

அதிகளவில் நீர் கிடைக்கும் இடங்களில் நெல், கரும்பு, வாழையும், குறைந்த அளவில் நீர் கிடைக்கும் பகுதிகளில் சோளம், உளுந்து போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர். டெல்டா மாவட்டங்கள் என்பதில் திருவாரூக்கு முக்கியப் பங்கு உள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூறியதாவது.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பிரதான தொழிலாக விவசாயமே அமைந்துள்ளது. பல்வேறு ஆறுகள் கிளை வாய்க்கால்கள் ஓடியும், கடைமடை பகுதிக்கு போதியளவில் தண்ணீர் வரவில்லை. ஆகையால் மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் பெற்று ஆங்காங்கே விவசாயம் செய்து வருகிறோம்.

இதற்கு முக்கியக் காரணம் மேட்டூரில் இருந்து விவசாயத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கிடைக்கவில்லை. ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வாராததால் தண்ணீர்  ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நிற்கிறது.

மேலும், துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை போக்க உடனடியாக ஆறுகள், வாய்க்கால்களில் மண்டிக் கிடக்கும் செடி, கொடிகள், நாணல்களை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் திருவாரூர் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பாய்ந்து கடைமடை விவசாயிகள் பயன்பெற முடியும்.

 இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

.குமரன்.

Leave a Reply