இலங்கை கடற்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பில் நடத்திய விசாரணையின் போது, லேசர் பிரிண்டர் மூலம் கள்ள பணம் அச்சிட்ட ஒரு நபரை கையும், களவுமாக, இலங்கை கடற்படையினர் (16 ஜனவரி 2018) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், நூறு அமெரிக்க டாலர்கள் மற்றும் போலி பணம் அச்சிட பயன்படுத்தப்பட்ட ஒரு லேசர் பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கொழும்பு சிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.